வெற்றியுடன் தொடங்குமா இந்திய அணி? இன்று இந்தியா - நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டி.! - Seithipunal
Seithipunal


இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று மதியம் நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

அதன்படி, ஹைதராபாத்தில் இன்று (ஜன.18ஆம் தேதி) முதல் ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து ஜன.21ம் தேதி ராய்ப்பூரில் 2வது ஒருநாள் போட்டியும், இந்தூரில் ஜன.24ம் தேதி 3வது ஒருநாள் போட்டியும் நடைபெற உள்ளது.

அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ராஞ்சியில் ஜன.27ம் தேதியும், லக்னோவில் ஜன.29ம் தேதியும், அகமதாபாத்தில் பிப்.1ம் தேதி முறையே நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் இந்திய அணி:

ரோகித் சர்மா (C), சுமன் கில், இஷான் கிஷன், விராட் கோலி, ரஜத் படிதார், சூரியகுமார் யாதவ், கே.எஸ் பரத் (WK), ஹார்திக் பாண்டியா (WC), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், யூஸ்வேந்திர சாஹல் குல்தீப் யாதவ், முகமது சமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக்.

இதுவரை நேருக்கு நேர்

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இதுவரை 113 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், 55 போட்டிகளில் இந்திய அணியும், 50 போட்டிகளில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளது. 7 போட்டிகளில் முடிவில்லை.  ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs NZ 1st ODI match today in Hyderabad


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->