IND vs NZ இன்று மோதல்...! சாம்பியன்ஸ் 2025 டிராபியை வெல்லுமா இந்தியா?
IND vs NZ clash today Will India win the Champions Trophy 2025
சாம்பியன்ஸ் டிராபி 2025 ஐசிசி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபாயில் இன்று நடக்கவுள்ளது. இறுதி போட்டிக்குச் சென்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று மோதவுள்ளது. இப்போட்டியைக் காண ரசிகர்கள் பலர் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றன. இந்தச் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சென்றதை ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக விளையாடிய லீக் சுற்று போட்டியில் நியூசிலாந்துடனான போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெற்றுள்ளது.

IND vs NZ:
இருப்பினும் ஐசிசி இறுதிப்போட்டி என்பதால் நியூசிலாந்து அணியுடனான ஆட்டத்தில் இந்திய அணி கோப்பையை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. கடந்த 2000ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பல பரிட்சை நடத்தின. அந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று கோப்பையைக் கைப்பற்றியது. அந்த வகையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு,இந்திய அணி இன்றைய போட்டியில் பதிலடி கொடுக்கும் முனைப்பில் களமிறங்குகிறது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள்:
இன்றைய போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்குத் தொடங்குகிறது. இந்தப் போட்டியை ரசிகர்கள் ஸ்மார்ட் போன் மூலம் அல்லது 18 சேனல்களில் நேரலையில் உற்சாகத்துடன் காணலாம்.
English Summary
IND vs NZ clash today Will India win the Champions Trophy 2025