வரலாற்றை மாற்றியமைக்குமா இந்திய அணி.? இந்தியா-தென் ஆப்பிரிக்கா முதலாவது டி20 போட்டி இன்று மோதல்.! - Seithipunal
Seithipunal


இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் முதலாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இதில்,  முதலாவது டி20 போட்டி இன்று திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன் ஃபீல்டு மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

இந்திய அணியில் கடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விளையாடிய ஹர்டிக் பாண்டியா மற்றும் புவனேஷ் குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ஹர்ஸ்தீப் சிங் மீண்டும் அணியில் இணைகிறார்.

அதேபோல் காயம் காரணமாக தீபக் ஜூடாவும், கொரோனா தொற்று காரணமாக முகமது ஷமியும் விலகியுள்ள நிலையில், அவர்களுக்கு பதிலாக ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் ஷபாஸ் அகமது ஆகியோர் இந்திய அணியில் இணைகின்றனர்.

இதுவரை நேருக்கு நேர் 

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இதுவரை 20 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 11 போட்டிகளிலும், தென் ஆப்பிரிக்கா 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவில்லை. அதேபோல் தென் ஆப்பிரிக்கா அணி இந்திய மண்ணில் இதுவரை டி20 தொடரை இழந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, 2015-ம் ஆண்டு நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா அணி கைப்பற்றியது.

2019-ம் ஆண்டு நடந்த 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

 2022 ஜூன் மாதம் நடந்த 5 போட்டிகள் தொடரை 2-2 என்ற கணக்கிலும் சமனில் முடிந்தது.

சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி இதுவரை வென்றதில்லை என்பதால் இந்த முறை அதனை உடைத்து வரலாற்றை மாற்றியமைக்க முயற்சி செய்யும் என்பதால் இந்த தொடர் இந்திய ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டி20 தொடருக்கான இந்திய அணி :

ரோஹித் சர்மா(கே), கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த்(வி.கீ), அக்சர் படேல், தினேஷ் கார்த்திக்(வி.கீ), தீபக் சாஹர், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், ஹர்ஷல் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஸ்ரேயாஸ் ஐயர், ஷபாஸ் அகமது.

டி20 தொடருக்கான தென்னாப்பிரிக்கா அணி: 

குயின்டன் டி காக்(வி.கீ), டெம்பா பவுமா(கே), ரிலீ ரோசோவ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், வெய்ன் பார்னெல், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி, ரீசா ஹென்ட்ரிக்ஸ், லீசா ஹென்ட்ரிக்ஸ்,  கேசவ் மகாராஜ், ஹென்ரிச் கிளாசென்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs SA 1st T20 match today in Thiruvananthapuram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->