இலங்கை அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி.. இந்திய அணி வெற்றி.. தொடரை வென்று அசத்தல்.! - Seithipunal
Seithipunal


இலங்கை அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது.

இதில், முதலில் நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மா, கோலி, ராகுல் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு, ஹார்திக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி விளையாடியது.

இதில், முதலில் நடைபெற்ற டி20 தொடரில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது உள்ளது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இந்திய அணியில் கடந்த போட்டியில் விளையாடிய சஹாலுக்கு பதிலாக குல்தீப் யாதவ் விளையாடினார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணி 39.4 ஓவர்களில் 10 விக்கெட்களையும் இழந்து  215 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் சிறப்பாக வீசிய முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். 

அதனைத் தொடர்ந்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 43.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் 64 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs SL 2nd ODI india won by 4 wickets


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->