இலங்கைக்கு எதிரான இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி! தொடரை கைப்பற்றியது இந்தியா.! - Seithipunal
Seithipunal


இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இருபது ஓவர் போட்டி மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் இருபது ஓவர் போட்டித்தொடர் நடைபெற்று வரும் நிலையில் லக்னோவில் நடைபெற்ற முதல் போட்டியில் இஷான் கிஷனின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரண்டாவது இருபது ஓவர் போட்டி தர்மசாலாவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, இருபது ஓவர்களின் முடிவில் 5 விக்கட்டுகளை இழந்து 183 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக நிசாங்கா 75 ரன்களும், ஷனாகா 47 ரன்களும் எடுத்தனர். 

பின்னர் 184 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய இந்திய அனி ஆரம்பத்திலேயே ரோஹித் ஷர்மா ஒரு ரன் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 16 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் வானவேடிக்கை நிகழ்த்தினார். அவருக்கு உறுதுணையாக சஞ்சு சாம்சனும் அதிரடி காட்டி 25 பந்துகளில் 39 ரன்களை எடுக்க இந்தியாவின் ரன் வேகம் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 

பின்னர் வந்த ஜடேஜா அதிரடியாக விளையாட 17.1 ஓவரில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. ஸ்ரேயாஸ் ஐயர் 44 பந்துகளில் 74 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 18 பந்துகளில் 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது. மூன்றாவது போட்டி ஞாயிற்றுக்கிழமை இதே மைதானத்தில் நடைபெறுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India Sri Lanka Cricket series


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->