#BigBreaking || இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்து வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி.! - Seithipunal
Seithipunal


தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனையடுத்து தென்ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய குவின்டன் டி காக் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

 

மறுமுனையில் மாலன் 1 ரன்னுக்கும், பவுமா 8 ரன்னுக்கும் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். சிறிது நேரம் நிலைத்து ஆடிய மரக்கரன் 15 ரன் எடுத்த போது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 

அதே சமயத்தில் ரெஸ்ஸி உடன் கைகோர்த்த குவின்டன் டி காக் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி செஞ்சுரியை பூர்த்தி செய்தார்.130 பந்துகளை சந்தித்த அவர் 124 ரன்களை (12 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 

அவரை தொடர்ந்து ரெஸ்ஸி 52 ரன்களுக்கும், மில்லர் 39 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர். 49.5 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 ரன்களை சேர்த்தது.

இதனையடுத்து, 288 ரன்கள் எடுத்தால் இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றியும், ஒயிட் வாஷ் தோல்வியில் இருந்து தப்பிக்கலாம் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. 

 

இந்திய தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேஎல் ராகுல் 9 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றம் அளித்தார். பின்னர், ஷிகர் தவானுடன் கைகோர்த்த விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

அதே சமயத்தில் நிதானமாகவும் தங்களது விக்கெட்டை இழக்காமல் ஆடினர். இதில், ஷிகர் தவான் 61 தனது விக்கெட்டை பறிகொடுக்க, தொடர்ந்து விராட் கோலி 65 ரங்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

சென்ற ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். ஸ்ரேயாஸ் அய்யர் 22 ரன்னுக்கும், சூர்யகுமார் யாதவ் முப்பத்தி ஒன்பது ரன்களுக்கும் தங்களது விக்கெட்டை பறிகொடுக்க, இந்திய அணி கிட்டத்தட்ட தோல்வியை தழுவி விட்டது இந்திய ரசிகர்கள் முடிவு கட்டிவிட்டனர்.

ஆனால், தனி ஒரு ஆளாக.., தனது அதிரடி ஆட்டத்தால் இன்னும் ஆட்டம் இருக்கிறது காத்திருங்கள் என்பது போல் தீபக் சாஹர் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஆட்டத்தின் திசையையே மாற்றினார். 

17 பந்துகளுக்கு இன்னும் 10 ரன்களை எடுக்க வேண்டிய கட்டத்தில், தீபக் சாஹர் விக்கெட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். அவர் 34 பந்துகளில் 55 ரன்களை சேர்த்தார். அதில், 5 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடங்கும்.

கடைசி ஆறு பந்துகளை 6 ரன்கள் எடுத்தால் இந்திய அணி வெற்றி, ஒரே ஒரு விக்கெட் எடுத்தால் தென்னாபிரிக்கா அணி வெற்றி என்ற நிலையில், முதல் பந்தில் ப்ரசித் கிருஷ்ணா ஒரு ரன் எடுத்தார். அடுத்த பந்த எதிர்கொண்ட சாஹல் கேட்ச் கொடுத்த ஆட்டமிழகவே தென்னாபிரிக்கா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

மேலும், இந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்து உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India vs South Africa 3rd one day MATCH RESULT


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->