4வது டெஸ்ட் போட்டி டிரா.. பார்டர் - கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி.! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், முதல் 3 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் தொடரை நிர்ணயிக்கும் நான்காவது டெஸ்ட் போட்டி மார்ச் 9ம் தேதி முதல் இன்று வரை (மார்ச் 13) அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வந்தது.

இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது‌. அதன்படி முதல் இன்னிங்சில் 480 ரன்கள் எடுத்தது. இதில் ஆஸ்திரேலியா அணியில் சிறப்பாக விளையாடிய உஸ்மான் கவாஜா 180 ரன்களும், கேமரூன் கிரீன் 114 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் சிறப்பாக பந்து வீசிய ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெடுகள் வீழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்து  இந்திய அணி முதல் இன்னிங்சில் 571 ரன்கள் குவித்தது. இதில் இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 186 ரன்களும், சுப்மன் கில் 128 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 91 ரன்கள் முன்னிலை பெற்றது.அதனைத் தொடர்ந்து 2வது இன்னிங்ஸ் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரு அணி கேப்டன்களும் கை கொடுத்து ஆட்டத்தை டிரா செய்வதாக தெரிவித்தனர்.

தொடரை வென்ற இந்திய அணி

4 போட்டிகள் டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற, 3வது போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருந்தது. இந்த நிலையில் 4வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தடைந்து.

இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன்

இந்த போட்டியில் ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். மேலும் தொடர் நாயகனாக இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா தேர்வு செய்யப்பட்டனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி

நியூஸிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் கேன் வில்லியம்சனின் அபார ஆட்டத்தால் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் இலங்கை ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. மேலும், இந்தியா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

அதன்படி, ஜூன் மாதம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India won the border Gavaskar trophy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->