INDvsBAN ஆட்டத்தை தடைசெய்யக்கோரி போராட்டம்! சென்னையில் அரசியல் கட்சி தலைவர் கைது!
INDvBAN Chennai Arjun Sambath Arrested
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா - வங்கதேசம் இடையேயான டெஸ்ட் போட்டியை தடை செய்ய கோரி இந்து மக்கள் கட்சி சார்பாக போராட்டம் நடைபெற்றது.
இந்த டெஸ்ட் போட்டியை தடை செய்ய கோரி நடந்த போராட்டத்தில், போராட்டக்காரர்களின் கடிதத்தை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணை செயலாளர் பாபா நேரில் வந்து பெற்றுக் கொண்டார்.
இருப்பினும் போராட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து போராட்டக் குழுவினர் கலைய மறுத்ததால் போலீசார் அவர்களை கூண்டோடு கைது செய்தனர்.
இதில், போராட்டம் நடத்திய தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட 15 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ஒரு அண்மைய செய்தி:
திருச்சி ஸ்ரீரங்கம் வடக்கு மற்றும் கிழக்கு உத்தர வீதிகளில், பக்தர்களின் வசதிக்காக பொதுக்கழிப்பறைகள் கட்டும் மாநகராட்சியின் நடவடிக்கைக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது.
ஏற்கனவே இருந்த தற்காலிக கழிவறைகளால் துர்நாற்றம் ஏற்பட்டதால், தற்போது நிரந்தரக் கழிவறைகள் கட்டப்பட உள்ளன. ஆனால், கோயில் உற்சவ பாதையாக இருப்பதால், சிரமம் ஏற்படும் என தடை கோரி வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
கழிவறை கட்ட தடை விதித்த நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு, மாநகராட்சி ஆணையர் பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
English Summary
INDvBAN Chennai Arjun Sambath Arrested