#BigBreaking || ஆல்-அவுட் - தென் ஆப்ரிக்காவை போட்டு தாக்கிய ஷர்த்துல் தாக்கூர்.! மொத்தம் 7 விக்கெட்., மரண மாஸ்.!
INDvSA second test 2022
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது.
இதனை தொடர்ந்து 2வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இந்திய அணிக்கு தொடக்கம் அவ்வளவு சிறப்பானதஹ்க அமையவில்லை, 22 ரன்னுக்கு மயங்க் அகர்வால் தனது விக்கெட்டை பறிகொடுக்க, அடுத்து வந்த புஜாரா மூன்று ரங்களுக்கும், அஜிங்கிய ரஹானே ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தது அதிர்ச்சி கொடுத்தனர்.
அதனை தொடர்ந்து களமிறங்கிய ஹனுமா விஹாரி 20 ரன்களுக்கும், ரிஷப் பண்ட் 17 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கே எல் ராகுல் தனது அரை சதத்துடன் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடி ஆட்டத்தால் 50 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன், 46 ரன்னுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இறுதியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்க்சில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி, ஆரம்பத்தில் விக்கெட்டுகளை பறிகொடுக்காமல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கீகன் 62 ரன்களை எடுத்து அசத்தினார். அதேபோல் பவுமா 52 ரன்கள் எடுத்தார்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் தென்ஆப்பிரிக்கா அணி 79.4 ஓவர்களில் 229 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
தற்போது இந்திய அணியை விட தென் ஆப்பிரிக்கா அணி 27 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை ஷர்துல் தாகூர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். சமி இரண்டு விக்கெட்டுகளையும், பும்ரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்.