5 டக்-அவுட்! 46 -க்கு ஆல் அவுட்! கிரிக்கெட்டில் இந்திய அணியின் கொடூர ஆட்டம்! - Seithipunal
Seithipunal


பெங்களூரில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் டாஸ் போடாமலேயே கைவிடப்பட்டது.

இன்று இரண்டாம் நாள் டாஸ் போடப்பட்ட நிலையில், இந்திய அணி வென்று பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்கார்களாக ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா களமிறங்கினர்.

இதில், ரோஹித் சர்மா 2 ரங்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய விராட் கோலி டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். சர்ஃபராஸ் கான் தனது திறமையை வெளிப்படுத்துவார் என்று பார்த்தால் அவரும் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

இந்த நிலையில், சற்றுமுன் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அணைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 46 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. விராட் கோலி, சர்ஃபராஸ் கான், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் டக் அவுட் ஆனார்கள்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 36 ரங்களுக்கு ஆட்டமிழந்து இருந்தது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

INDvsNZ test match 2024 46


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->