ஐபில் 1000வது வரலாற்று சிறப்புமிக்க போட்டி.. மும்பை - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 1000வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74  போட்டிகள் நடைபெற உள்ளது. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ்  அணி இதுவரை 8 போட்டியில் விளையாடியுள்ள நிலையில் 5 போட்டியில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

அதேபோல் இதுவரை 7 போட்டியில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 3 போட்டியில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 1000வது ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

1000ஆவது போட்டியாக உள்ளதால் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வரலாற்று சிறப்புமிக்க போட்டியாக இந்த போட்டி கருதப்படுகிறது. மேலும், மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் ஷர்மா பிறந்தநாளில் இந்த போட்டி நடைபெறுவதால் இன்னும் சிறப்பாக அமைந்துள்ளது.

இதுவரை நேருக்கு நேர்

இவ்விரு அணிகளும் இதுவரை 27 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், 14 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியும், 12 போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், ஒரு போட்டியில் முடிவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 1000th match MI vs RR today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->