#IPL2022 || இடியென அடித்து நொறுக்கிய ருதுராஜ்.! சென்னை அணி அசத்தல் ரன் குவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனின் லீக் ஆட்டத்தில் தற்போதுவரை ஒரு வெற்றி, 4 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது. 

இந்நிலையில், சென்னை அணி தனது 6-வது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்சை அணியுடன் ஆடி வருகிறது. டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

அதன்படி, களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருத்ராஜ் கெய்வாட் தனது அதிரடி ஆட்டத்தால் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸர் உட்பட 73 ரன்கள் சேர்த்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதே போல் அம்பத்தி ராயுடு தனது சிறப்பான ஆட்டத்தால் 46 ரன்கள் எடுத்து அசத்தினார். ராபின் உத்தப்பா 3 ரன்களுக்கும், மொயின் அலி ஒரு ரன்னுக்கும் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு, 169 ரன்கள் சேர்த்தது. இதனை அடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்க உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ipl 2022 csk GT Match st half


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->