#IPL2023 : சென்னை - டெல்லி போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, மே 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெற உள்ளது. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 10 போட்டியில் விளையாடி உள்ள நிலையில் 6 போட்டியில் வெற்றி மற்றும் ஒரு போட்டியில் முடிவில்லை என 13 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் வரும் மே 10ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதுகிறது. இதனையடுத்து இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை தொடங்குகிறது.

அதன்படி, நாளை காலை 9.30 மணி முதல் நேரடி மற்றும் ஆன்லைன் டிக்கெட்களை ரசிகர்கள் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த போட்டிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட அதே கட்டணம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது

அந்த வகையில் ரூ.1500 ரூபாய்க்கான டிக்கெட்கள் நேரடியாக மட்டும் விற்பனை செய்யப்படும். அதேபோல் 2000 மற்றும் 2500 ரூபாய்க்கான டிக்கெட்டுகள் நேரடி மற்றும் ஆன்லைனிலும் விற்பனை செய்யப்படும்.

மேலும், 3000 மற்றும் 5000 ரூபாய்க்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் மூலம் மட்டுமே விற்பனை செய்யப்படும். அந்த வகையில் ஆன்லைன் டிக்கெட்களை பேடிஎம் அல்லது www.insider.in என்ற இணையதளம் மூலமாக வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2023 55th match CSK vs DC tickets from tomorrow


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->