உடைந்துபோன தோனி! சம்பவம் செய்த பெங்களூர் அணி! இன்று முடிவாகும் பிளே ஆஃப் ஆட்டங்கள்! - Seithipunal
Seithipunal


சிஎஸ்கே அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு அணி ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரின் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. கிட்டத்தட்ட இது அறிவிக்கப்படாத காலிறுதி ஆட்டம் தாம். 

வாழ்வா சாவா என்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கோலி - டு பிளேசிஸ் நல்ல தொடக்கத்தை அணிக்கு கொடுத்தனர்.

இதில் கோலி 47 ரன்னுக்கும், டு பிளேசிஸ் 54 ரன்னுக்கும் ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிய ராஜட் படிக்கர் 41 ரன்னுக்கும், கீரின் 36 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த 218 ரன்கள் சேர்த்து. சென்னை அணியின் பந்து வீச்சு தரப்பில் தரப்பில் ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளும், துஷார் தேஷ்பாண்டே, சாட்னர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி அல்லது 201 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தாலும் பிளே ஆஃப் செல்லலாம் என்ற வாய்ப்புடன் களமிறங்கிய சென்னை அணிக்கு முதல் பாலே அதிர்ச்சி காத்திருந்தது. தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிவந்த அணியின் கேப்டன் ருதுராஜ் கோல்டன் டக் முறையில் வெளியேறினார்.

அடுத்து வந்த மிட்செல் 4 ரன்னில் அவுட் ஆக ரச்சின் மற்றும் ரகானே ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க தொடங்கினர். இதில் ரகானே 33 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த துபே 7 ரன்னிலும், மிட்செல் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ரச்சின் அவிந்தரா 61 ரன்னில் ஆட்டமிழந்தார். 

இதனையடுத்து களமிறங்கிய தோனி, ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்து கணிசமாக ரன் அடிக்க, ஒரு கட்டத்தில் 12 பந்தில் 35 ரன்கள் தேவை என்ற நிலை வந்த போது தனக்கே உரிய அதிரடி ஆட்டத்தை தொடங்கினார் தோனி. 

கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்தில் சிக்சரை பறக்க விட்டு ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்த தோனி, அடுத்த பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று அவுட் ஆனார்.

இறுதியில் சிஎஸ்கே அணி வெற்றி இலக்கை எட்ட முடியாமல் தோலிவியடைந்ததுடன் பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியது. இந்த வெற்றியின் மூலம் 14 புள்ளிகள் பெற்று ஆர்சிபி அணி ரன்ரேட் அடிப்படியில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

பிளே ஆஃப் சுற்றில் கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத், பெங்களூர் அணிகள் மோதுவது உறுதியானாலும், இந்த அணிகளுக்கு இடையேயான ஆட்டங்கள் இன்று தான் உறுதியாகும்.

ராஜஸ்தான் அணி 16 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஹைதராபாத் அணி 15 புள்ளிகளுடன் 3 இடத்தில் உள்ளது. இன்று பஞ்சாப் அணியுடனான ஆட்டத்தில் ஹைதாபாத் அணி வெற்றிபெற்றால் இரண்டாம் இடத்திற்கு செல்லும் வைப்பு உள்ளது. இந்த ஆட்டத்தில் முடிவை பொறுத்தே பெங்களூர் அணி யாருடன் மோதும் என்பது உறுதியாகும். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2024 CSK RCB Play Off 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->