#IPL2023 : பஞ்சாபை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி.. கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிப்பு.! - Seithipunal
Seithipunal


16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, மே 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெற உள்ளது. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற  53வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. அந்தணியில் சிறப்பாக விளையாடிய தவான் 57 ரன்கள் குவித்தார்.

அதனைத் தொடர்ந்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய ரசல் 23 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார்.

இந்த நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் கொல்கத்தா அணி பந்து வீச வழங்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக நேரம் எடுத்துக் கொண்டதால் கொல்கத்தா அணியின் கேப்டன் பிரிட்டிஷ் ராணாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் பிடித்து ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL committee fined 12 lakhs to KKR captain nithish Rana for slow bowling


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->