இன்று சென்னை - குஜராத் இறுதிப்போட்டி.. இன்றும் மழைக்கு வாய்ப்பு.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானத்தில் இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் அனைத்து போட்டிகளும் முடிவடைய உள்ள நிலையில், இன்று இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இதில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

இதனையடுத்து கடந்த 24ம் தேதி நடைபெற்ற குவாலிஃபயர் 1 போட்டியில் குஜராத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிஃபயர் 2 போட்டிக்கு முன்னேறியது.

அதனைத் தொடர்ந்து 26ம் தேதி இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற குவாலிஃபயர் 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில் நேற்று இரவு அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவிருந்த இறுதிப்போட்டி கன மழையின் காரணமாக இன்று நடைபெற உள்ளது. அதன்படி இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை -குஜராத் அணிகள் மோதும் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.

மழை குறுக்கீடு

நேற்று இரவு 11 மணி வரை மழை தொடர்ந்ததால் போட்டி நடைபெறவில்லை. மேலும் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பூட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானத்தில் என்றும் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது.

மழைக்கு வாய்ப்பு

இந்த நிலையில் இன்றும் அகமதாபாத் மைதானத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வானிலை மைய அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த தகவல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாருக்கு சாம்பியன் வாய்ப்பு

ஒருவேளை இன்றும் மழை பெய்து போட்டி நடைபெறாமல் ரத்து செய்யப்பட்டால் லீக் சுற்று போட்டிகளின் முடிவில் அதிக புள்ளிகளை பெற்ற அணி சாம்பியன் அணியாக அறிவிக்கப்படும். அந்த வகையில் லீக் சுற்று போட்டிகளின் முடிவில் அதிக புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL Final CSK vs GT Match today also Rain


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->