IPL2023 : ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் புதிய நடைமுறை அறிமுகம்.. என்ன தெரியுமா.? - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இம்பேக்ட் ப்ளேயர் என்ற புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் 2023ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் 16வது ஐபிஎல் சீசன் தொடங்கவுள்ளது.

இந்திய ரசிகர்களின் கவனம் தற்போது ஐபிஎல் தொடர் மீது திரும்பி உள்ளது. மேலும் அதற்கான பணிகளை பிசிசிஐ-யும் தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதி அன்று கொச்சியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இம்பேக்ட் பிளேயர் என்ற புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி இம்பேக்ட் பிளேயர் என்றால் போட்டி நடந்து கொண்டிருக்கும் போது விளையாடும் 11 வீரர்களில் ஒருவரை மாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதற்கு சில விதிமுறைகளையும் விதித்துள்ளது அதன்படி 11 வீரர்களை அறிவிக்கும் போது மாற்று வீரர்களையும் அறிவிக்க வேண்டும். மேலும் 14-வது ஓவர் முடியும் முன்பாக அணியின் ஒரு வீரரை மாற்றிக் கொள்ள முடியும் எனவும், அவர் பேட்டிங், பவுலிங் செய்யலாம் எனவும் பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.

அதேபோல், அந்த இம்பேக்ட் வீரரை பேட்ஸ்மேனுக்கு பவுலராகவோ, இல்லை பவுலருக்கு பேட்ஸ்மேனாகவோ கூட மாற்றலாம். இதில் எந்த கட்டுப்பாடும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL introduced new rules of impact player


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->