வாஷிங்டன் சுந்தரை தட்டி தூக்கிய, தமிழகத்தை சேர்ந்த நபரின் அணி., ஹசரங்காவை எடுத்த பெங்களூர்,!
IPL Mega Auction 2022 SRH SUNDAR
15வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் இந்தியாவில் தொடங்க உள்ளது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் புதிதாக இணைந்துள்ளது.
10 அணிகளால் மொத்தம் 33 வீரர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 8 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 25 வீரர்களை வைத்துக்கொள்ளலாம். அதன்படி, பார்த்தால் இன்னும் 217 வீரர்கள் தேவைப்படுகின்றனர்.
அதன்படி இன்று பெங்களூருவில் 15வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் தொடங்கியது. இன்றைய ஐபிஎல் மெகா ஏலத்தில் 161 வீரர்கள்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இதுவரை இந்த ஏலத்தில்,
* குஜராத் - முகமது ஷமி, ஜேசன் ராய்
* லக்னோ - குயின்டன் டி காக், மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா, ஜேசன் ஹோல்டர்
* பெங்களூர் - ஹர்ஷல் பட்டேல், பாப் டூ பிளஸ்சி
* கொல்கத்தா - ஸ்ரேயாஸ் ஐயர், நிதீஷ் ராணா, பேட் கம்மின்ஸ்
* சென்னை சூப்பர் - டிவைன் பிராவோ, ராபின் உத்தப்பா,
* ராஜஸ்தான் - ட்ரெண்ட் போல்ட், ரவிச்சந்திரன் அஸ்வின், தேவ்தத் படிக்கல், ஷிம்ரன் ஹெட்மேயர்,
* டெல்லி - டேவிட் வார்னர்
* பஞ்சாப் - ஷிகர் தவான், ககிஸோ ரபாடா எடுக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஐபிஎல் மெகா ஏலத்தில் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்காவை ₹10.75 கோடிக்கு பெங்களூர் அணி ஏலம் எடுத்து உள்ளது.
இதேபோல், சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி வாஷிங்டன் சுந்தரை 8.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.
English Summary
IPL Mega Auction 2022 SRH SUNDAR