பாகிஸ்தான் மற்றும் இந்திய சிறையில் அடைக்கப்பட்ட இருநாட்டு நபர்களின் விபரங்கள்..! - Seithipunal
Seithipunal


தங்கள் நாட்டு சிறைகளில் இருக்கும் இந்தியர்கள் பற்றிய விவரத்தை பாகிஸ்தான் வழங்கியுள்ளது. நம்நாட்டு சிறைகளில் இருக்கும்  பாக்கிஸ்தான் மீனவர்கள் குறித்த விவரத்தை  இந்தியா பாகிஸ்தானிடம் வழங்கி உள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக பகை நீடித்து வருகிறது. இதனால், எல்லை தாண்டி செல்பவர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்படுகின்றனர். 

அதில் அப்பாவி மக்கள், மீனவர்கள், பாதுகாப்பு படையினர் அடங்குகின்றனர்

இவ்வாறு  கைது செய்யப்படுகின்றர்கள் சிறையில்  நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்படுகின்றன. அவர்களின் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சிறைகளில் உள்ள அப்பாவி மக்கள், மீனவர்கள் குறித்த விவரங்களை பரிமாறிக் கொள்வதற்காக இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் போடப்பட்டது.

2008 ஆம் ஆண்டு தூதரக ரீதியில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் ஜன.,01 மற்றும் ஜூலை 01-இல்  பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களின் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படும். அந்த வகையில், இரு நாடுகளும் இன்று அறிக்கையை பரிமாறிக் கொண்டுள்ளன.

அதில் பாகிஸ்தானைச் சேர்ந்த 381 அப்பாவி மக்கள் மற்றும் 81 மீனவர்கள் இந்திய சிறையில் அடைக்கப்பட்டு என்றும், இந்தியாவைச் சேர்ந்த 49 அப்பாவி மக்கள் மற்றும் 217 மீனவர்கள் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இரு நாடுகளிலும் உள்ள கைதிகள் மற்றும் மீனவர்கள் உட்பட அனைத்து மனிதாபிமான விஷயங்களுக்கும் முன்னுரிமை அளித்து தீர்வு காண்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.

மத்திய அரசின் முயற்சியால், கடந்த 2014 முதல் 2,639 மீனவர்கள் மற்றும் 71 பொது மக்கள் பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டனர். 

அத்துடன், 2023 ல் மட்டும் 478 இந்திய மீனவர்கள் மற்றும் 13 அப்பாவி மக்கள் பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு, பாகிஸ்தானிடம் இந்தியா சில  கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. அதில், 

பாகிஸ்தானில் காவலில் உள்ள மீனவர்கள், அப்பாவி மக்கள் மற்றும் பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர்களை முன்கூட்டியே விடுவித்து இந்தியாவிற்கு அனுப்ப வேண்டும்.

தண்டனை காலம் முடிந்த 183 மீனவர்கள் மற்றும் அப்பாவி மக்களை உனடியாக விடுதலை செய்து இந்தியாவிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

சிறையில் இருக்கும் இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு தூதரக ரீதியில் உதவி செய்ய அனுமதி வழங்க வேண்டும். அங்கு இந்தியா திரும்ப காத்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்.

இந்தியா சிறையில் 76 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகம் உள்ளது. அவர்களின் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் தானா அல்லது இல்லையா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளது.

பாக்கிஸ்தான் சிறையில் இருக்கு இந்தியர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது; வெளியிட்ட அந்நாட்டு அரசாங்கம்.   சிறையில் இருக்கும் இந்தியர்கள் எத்தனை பேர்; விவரம் வழங்கியது பாக்., இந்திய சிறையில் இருக்கும் பாகிஸ்தானியர் எத்தனை பேர்? 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Details of innocent people from both countries imprisoned in Pakistani and Indian jails


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->