தமிழகத்தில் புதிய உதயமாகும் 13 நகராட்சிகள்..!
tamilnadu government create 13 new muncipalities
தமிழகத்தில் 13 புதிய நகராட்சிகள் மற்றும் 16 மாநகராட்சிகளை விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளிவியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நகரமயமாதலில் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழக அரசு, நகரமயமாக்கலின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், நகர்ப்புரத்தினை ஒட்டியுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் நகரமயமாக்கலின் தன்மையினை பொறுத்து, கிராம ஊராட்சிகளை மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுடன் இணைத்தும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும், நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும் தரம் உயர்த்துதல் அல்லது மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழக அரசு, கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட 13 நகராட்சிகளை உருவாக்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதேபோல், திருவாரூர், திருவள்ளூர், சிதம்பரம் உள்ளிட்ட 40 நகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாகவும், சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளை விரிவாக்கம் செய்யவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
16 மாநகராட்சிகளுடன் 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 149 ஊராட்சிகளை இணைக்கவும், ஏற்காடு, காளையார்கோவில், திருமயம் உள்ளிட்ட புதிதாக 25 பேரூராட்சிகளை அமைக்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
29 கிராம ஊராட்சிகளை 25 பேரூராட்சிகளுடன் இணைக்கவும் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
English Summary
tamilnadu government create 13 new muncipalities