#BREAKING : தொகுப்பாளர் ஹக் எம்மாண்டஸ்க்கு என்ன ஆனது? இன்று ஏலம் நடைபெறுமா? அதிகாரபூர்வ செய்தி வெளியானது.! - Seithipunal
Seithipunal


15வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் இந்தியாவில் தொடங்க உள்ளது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் புதிதாக இணைந்துள்ளது. 

இன்று பெங்களூருவில் 15வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் தொடங்கியது. இன்றைய ஐபிஎல் மெகா ஏலத்தில் 161 வீரர்கள்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறும் மேடையிலேயே தொகுப்பாளர் ஹக் எம்மாண்டஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சற்றுமுன் பிபிசிஐ விடுத்துள்ள அறிவிப்பில், "இன்று பிற்பகல் ஐபிஎல் ஏலத்தின் போது, ​​ஐபிஎல் ஏலதாரரான ஹக் எட்மீட்ஸ், 'போஸ்டுரல் ஹைபோடென்ஷன்' காரணமாக துரதிர்ஷ்டவசமாக கீழே விழுந்தார்.

சம்பவம் நடந்த உடனேயே அவருக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து, அவர் உடல்நிலை தேறியுள்ளார், இன்று ஏல நடவடிக்கைகள் தொடரும். அதே சமயத்தில், ஹக் எட்மீட்ஸ்க்கு பதிலாக சாரு ஷர்மா தொகுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IPL Mega Auction anchor hug emmandas HEALTH


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->