#IPL2023 : ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அபராதம்..  ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74  போட்டிகள் நடைபெற உள்ளது. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல் ராயல்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரண்டாவது இன்னிங்ஸில் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் அம்பயர்கள் பந்தை மாற்றி வழங்கினர்.

இது குறித்து பேசிய அவர், அம்பையர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் பந்தை மாற்றி வழங்கியது ஆச்சரியமாக இருந்தது. எந்த சீசனிலும் இதுவரை இது போல் நடந்ததை நான் பார்த்ததில்லை. அம்பயர்கள் பந்தை மாற்றி கொடுத்தது எனக்கு வியப்பாக இருந்தது. இது நல்லதோ கெட்டதோ இரு அணிகளுக்கும் பேலன்ஸாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் அம்பயர்கள் குறித்து நேரடியாக விமர்சனம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL2023 Ravichandran Ashwin fined IPL management action


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->