சென்னை - மும்பை ஆட்டத்தை கண்டு ரசித்த பிரபலங்களின் புகைப்படங்கள் தொகுப்பு!  - Seithipunal
Seithipunal


சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையேயான பரபரப்பான ஆட்டம் நடைபெற்றது.

மும்பை அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 13 வருடங்களுக்கு பிண சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை அணியை சென்னை அணி வீழ்த்தியுள்ளது. 

இந்த ஆட்டத்தை காண நடிகர் தனுஷ், நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவம், இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் அஷ்வின் உள்ளிட்ட திரை பிரபலங்கள் நேரில் மைதானத்திற்கு நேரில் வந்து கண்டு களித்தனர்.

இதே போல் அரசியல் பிரபலங்களும் இந்த ஆட்டத்தை கண்டு ரசித்தனர். குறிப்பாக சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், அவர் தொகுதிக்குட்பட்ட மாணவ மாணவிகளுடன் இன்றைய ஆட்டத்தை கண்டு ரசித்தார்.

மேலும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வமும் இன்றைய ஆட்டத்தை மைதானத்திற்கு நேரடியாக வந்து கண்டுகளித்தார்.

அப்போது ஓபிஎஸ், முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரிசனை நேரில் சந்தித்து பேசி இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL2O23 CSKvsMI ChennaiSuperKings


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->