IRE vs IND : தொடரை கைப்பற்றுமா இந்திய அணி.? இன்று 2வது டி20 போட்டி.!!
IRE vs IND 2nd T20 Match
அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 2 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய இருந்த நிலையில், மழை பெய்ததால் போட்டி தாமதமாக தொடங்கியது. இதனால் 12 ஓவராக போட்டி குறைக்கப்பட்டது. முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் தீபக் ஹூடா 29 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இஷான் கிஷன் 26 ரன்னும், ஹர்திக் பாண்டியா 24 ரன்னும் எடுத்தனர். 9.2 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. 20 ஓவர் போட்டியில் அயர்லாந்து அணியுடன் இதுவரை 4 முறை உள்ள இந்திய அணி 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியை தொடருவதுடன் தொடரை கைப்பற்றவும் இந்திய தீவிரம் காட்டும். ஆறுதல் வெற்றியை பெற அயர்லாந்து அணி போராடும். எனவே இந்த ஆட்டத்தில்விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு போட்டி தொடங்கும்.