அதிரடி காட்டிய தீபக் ஹூடா.. கடைசி ஓவர்களில் திரில் வெற்றி பெற்ற இந்திய அணி.!! - Seithipunal
Seithipunal


அயர்லாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்கார இஷான் கிஷன் 3 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா, சஞ்சு சாம்சனுடன்  இணைந்து அயர்லாந்து பந்துவீச்சாளர்கள்களை திணறவிட்டனர். பந்தை நாலா பக்கமும் இந்த ஜோடி பறக்க விட்டது. சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து அதிரடி காட்டிய தீபக் ஹூடா 57 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

சூரியகுமார் யாதவ் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்ஷல் படேல் ஆகியோர் டக் அவுட்டாகினர். 20 ஓவர் முடிவில் 227 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி அந்த இலக்குடன் களம் இறங்கி அயர்லாந்து தொடக்க ஆட்டக்காரர் பால் ஸ்டிர்லிங் 40 ரன்கள் ஆட்டமிழந்தார். கேப்டன் ஆன்டி பால்பிர்னி 60 ரன்கள் எடுத்தார். 

கடைசி வரை அயர்லாந்து அணி வீரர்கள் போராடினர். கடைசி ஓவரில் ஒரு பந்துக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்தனர். 20 ஓவர் முடிவுகள் 5 விக்கெட் இழப்புக்கு 221 எடுத்தனர். நான்கு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி பெற்று, தொடரை 2 - 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IRE vs IND 2nd T20 Match Ind Win


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->