அயர்லாந்து அணியை துவம்சம் செய்த தீபக் ஹூடா.. முதல் வெற்றி.!! - Seithipunal
Seithipunal


அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 2 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி, அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய இருந்த நிலையில், மழை பெய்ததால் போட்டி தாமதமாக தொடங்கியது. இதனால் 12 ஓவராக போட்டி குறைக்கப்பட்டது. முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அயர்லாந்து அணி வீரர் ஹாரி டெக்டர் 33 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். 

இதையடுத்து, 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் தீபக் ஹூடா 29 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இஷான் கிஷன் 26 ரன்னும், ஹர்திக் பாண்டியா 24 ரன்னும் எடுத்தனர். 

9.2 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை இந்திய அணி வெற்றி பெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IRE vs IND match indi win


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->