ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி : இன்று சென்னை - கோவா அணிகள் மோதல்! - Seithipunal
Seithipunal


ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் இன்று சென்னை - கோவா அணிகள் மோதுகிறது.


இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரான ஐ.எஸ்.எல் தொடர் கடந்த மாதம் 13-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில்,  2-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி ஒடிசா எப்.சி வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை - கோவா அணிகள் மோத உள்ளன. சென்னை அணி இந்த ஆட்டத்தில் ஆட உள்ளதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

முன்னதாக சென்னை அணி 4 ஆட்டங்களில் 2 வெற்றி , ஒரு டிரா , ஒரு தோல்வி என புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. மேலும், கோவா அணி 5 ஆட்டங்களில் ஒரு வெற்றி , 2 டிரா , 2 தோல்வி என புள்ளி பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Isl football match chennai goa teams clash today


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->