பக்கத்து வீட்டாருக்கு கெட்ட நாள்! பாகிஸ்தானை கலாய்த்த இந்திய கிரிக்கெட் வீரர்! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற வரும் உலக கோப்பை டி20 தொடர்கான இன்றைய லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஜிம்பாவே அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சம்பவ அணி இருவது ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 13 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணி 131 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது.

இலக்கு எளிதாக இருந்தாலும் ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அணி முதல் ஐந்து பந்துகளில் எட்டு ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி பந்தில் மூன்று ரன்கள் தேவைப்பட்ட பொழுது பாகிஸ்தான் அணியால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் காரணமாக ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஜிம்பாப்வே அணி.

இந்நிலையில் இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா ஜிம்பாப்வே அணியின் வெற்றி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் " இது வருத்தம் இல்லை.. எப்பொழுதுமே ஜிம்பாப்வே ஆட்டம் தான்... பக்கத்து வீட்டுக்காரருக்கு தான் கெட்ட நாள்" என பதிவிட்டுள்ளார். பாகிஸ்தான் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை அமித் மிஸ்ரா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Its not an upset Bad day for neighbours said amit mishra


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->