புதிய கேப்டன் தலைமையில் அயர்லாந்துக்கு எதிரான டி20 இந்திய அணி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


அயர்லாந்தில் வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் நடைபெறவிருக்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டார். காயம் காரணமாக சுமார் 10 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தியா அணிக்கு திரும்பி உள்ளார்.

மேலும் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய திலக் வர்மா, ரவிக்கு சிங் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகி இருந்த பிரசித் கிருஷ்ணா இந்த தொடர் மூலம் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.

அயர்லாந்து செல்லும் இந்திய அணி:

ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட்), ஜிதேஷ் சர்மா (விக்கெட்), ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், அவேஷ் கான்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jasprit Bumrah selected as captain of T20 cricket team


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->