டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதாது - ஜாஸ் பட்லர்.!
Jos butler speech about T20 World Cup IND vs ENG match
ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில், சூப்பர் 12 சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடைபெற உள்ளது.
இதில் சூப்பர் 12 சுற்றுகளின் முடிவில் நியூஸிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது. அதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
அதனைத் தொடர்ந்து நாளை (நவம்பர் 10ம் தேதி) நடைபெறும் மதியம் 1.30 மணிக்கு அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான அரையிறுதி போட்டி குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் பேட்டி அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெறாமல் பார்த்துக் கொள்வேன் என தெரிவித்துள்ளார். மேலும், அரையிறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்துவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டி20 போட்டிகளில் இந்திய அணி வலுவாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருகிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போதுள்ள இந்திய அணியில் விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஆனால், நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை வீழ்த்த போராடுவோம் என தெரிவித்துள்ளார்.
English Summary
Jos butler speech about T20 World Cup IND vs ENG match