ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட், இந்தியா இங்கிலாந்து நாளை பலப்பரீட்சை.! - Seithipunal
Seithipunal


ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் நாளை பலப்பரீட்சை நடத்த உள்ளன.

19 வயதுக்கு உட்பட்டோர் பங்கேற்கும் 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது.

16 அணிகள் பங்கேற்ற இப்போட்டித் தொடரில், அரை இறுதி ஆட்டங்களுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதி பெற்றன.

முதல் அரை இறுதியில் ஆப்கானிஸ்தானை 15 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தி இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 1998 ஆம் ஆண்டு ஜூனியர் உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அதன் பிறகு தற்போதுதான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது அரை இறுதியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து தொடர்ந்து 4-வது முறையாகவும், ஒட்டுமொத்தமாக 8-வது முறையாகவும் இறுதி போட்டிக்கு முன்னேறியது.

கோப்பை யாருக்கு என்பதை முடிவு செய்யும் இறுதிப்போட்டி நாளை நடைபெறுகிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நாளை மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா, இங்கிலாந்து அணிகள் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என சமபலத்துடன் இருப்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 4 முறை சாம்பியனான இந்தியா 5-வது முறையாக பட்டத்தை வெல்லும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Junior world cup cricket final


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->