#IPL2023 : ஐபிஎல் தொடரிலிருந்து லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் விலகல்.. மாற்று வீரர் அறிவிப்பு.!
Karun Nair replaces KL Rahul in LSG in IPL 2023
கடந்த 1ம் தேதி லக்னோ மைதானத்தில் நடைபெற்ற 43-வது ஐபிஎல் லீக் போட்டியில் டூப்ளிசிஸ் தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் மோதின.
இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் பீல்டிங் செய்து கொண்டிருந்த லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுலுக்கு தொடையில் காயம் ஏற்பட்டதால் ஆட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறினார். பின்னர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
கே.எல் ராகுலுக்கு தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், கே.எல் ராகுல் தொடரிலிருந்து வெளியேறியதால் லக்னோ அணியின் கேப்டனாக குருணல் பாண்டியா செயல்படுவார் என கூறப்படுகிறது.
ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குருனால் பாண்டியா கேப்டனாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கே.எல்.ராகுல் ஜூன் மாதம் நடைபெற உள்ள ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக லக்னோ அணியில் கருண் நாயர் சேர்க்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
English Summary
Karun Nair replaces KL Rahul in LSG in IPL 2023