ரோஹித் விலகல்., துணை கேப்டன் பதவி யாருக்கு தெரியுமா? அதிரடியாக அறிவித்த பிசிசிஐ.!
KLRahul RohitSharma
தென் ஆப்ரிக்கா செல்லவுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள், நான்கு 'டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் டிச. 17 -ஆம் தேதி ஜோகனஸ்பர்க் நகரில் துவங்குகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 17ம் தேதி தொடங்குவதாக இருந்தது. தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறவிருந்த முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோலி தலைமையிலான இந்திய அணியில், ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ஷ்ரேயாஸ், விஹாரி, பண்ட், சஹா, அஷ்வின், ஜெயந்த் யாதவ், இஷாந்த், சமி, உமேஷ், பும்ரா, ஷர்துல் தாகூர், சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். காயம் காரணமாக ரோஹித் ஷர்மா விலகியுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதவியை இழந்தார் ரஹானே இழந்துள்ளார். அதே சமயத்தில், டி20-ஐ தொடர்ந்து இந்திய ஒருநாள் அணிக்கும் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், தென்னாப்பிரிக்கா தொடருக்கான டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக கே.எல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடை தசைநார் காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்ட ரோஹித் சர்மாவுக்கு பதிலாக கேஎல் ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செஞ்சூரியனில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆயத்த பணிகளை இந்திய அணி தொடங்கியது. புகைப்படங்கள் தொகுப்பு: