சுனில் நரேனின் அதிரடியில், 05-வது தோல்வியை தழுவிய சி.எஸ்.கே; 03-வது இடத்துக்கு முன்னேறிய கொல்கத்தா..! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 2025 சீசனின் 25-ஆவது ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் ரகானே பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணி தொடக்கமுதலே சொதப்பியது. இதனால் சிஎஸ்கே 20 ஓவரில் 09 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் மாத்திரம் எடுத்தது. இதில் துபே 29 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக சுனில் நரைன் 03 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 02 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து 104 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கொல்கத்தா களமிறங்கியது.

ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய கொல்கத்தா அணியின் சுனில் நரைன் 44 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

முடிவில் ரிங்கு சிங் 15 ரன்களும், அஜிங்யா ரகனே 20 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் கொல்கத்தா அணி 10.1 ஓவர்களில் 02 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்தது. சென்னை அணியின் சார்பில் அன்சுல் காம்போஜ் மற்றும் நூர் அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 08 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் கொல்கத்தா அணி 03-வது இடத்திலும், சென்னை அணி 90-வது இடத்திலும் தொடர்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kolkata defeats Chennai team by 08 wickets


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->