IPL 2024 : 3வது முறையாக கோப்பையைக் கைப்பற்றி கொல்கத்தா சாதனை..!
Kolkatta Night Riders Won in IPL Final 2024
சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று IPL 2024 இறுதிப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இதையடுத்து இருவரும் வந்த வேகத்திலேயே அவுட்டாகி வெளியேறினர். கொல்கத்தா அணியின் அபாரமான பந்துவீச்சால் ஹைதராபாத் அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
IPL வரலாற்றிலேயே இதுதான் ஒரு அணி எடுத்த மிகவும் குறைவான ஸ்கோராகும். இதையடுத்து 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கோடு களமிறங்கிய கொல்கத்தா அணி 10.3 ஓவரில் எளிதாக இந்த வெற்றி இலக்கை எட்டியது.
இது கொல்கத்தா அணி வெல்லும் மூன்றாவது IPL கோப்பையாகும். முன்னதாக 2012 மற்றும் 2014ம் ஆண்டு கொல்கத்தா அணி IPL கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் IPL இறுதிப்போட்டியில் கோப்பையை வென்றுள்ளது அணியினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
Kolkatta Night Riders Won in IPL Final 2024