குஜராத் அணிக்கு புதிய வீராங்கனை! பாகிஸ்தானில் இருந்து புறப்பட்ட அதிரடி ஆட்டக்காரர்!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நடைபெற்று வரும் பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் குஜராத் ஜெயின்ஸ் அணியின் கேப்டன் ஆக நியமிக்கப்பட்டிருந்த பேத் மூனே முதல் போட்டியிலேயே காயம் அடைந்ததால் தொடரில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக யாரை தேர்வு செய்வது என குழம்பி வந்த நிலையில் தற்போது புதிய வீரரை தேர்வு செய்திருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

ஐந்து அணிகள் விளையாடும் இந்த போட்டி தொடரில் தொடக்க ஆட்டத்தில் விளையாடிய குஜராத் அணியின் கேப்டனாக, ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பேத் மூனே ஆடினார். அந்த அணியின் மிகச்சிறந்த ஆட்டக்காரராக கருதப்பட்டவர், ஆட்டத்தின் முதல்வரிலேயே காயம் அடைந்து வெளியேறியதை அடுத்து தொடரில் வெளியேறி இருக்கிறார். 

அந்த அணி விளையாடிய முதல் இரண்டு போட்டியிலும் தோல்வியை சந்தித்திருக்கிறது. அவருக்கு பதிலாக அந்த அணியின் கேப்டனாக  துணை கேப்டன் ஆக நியமிக்கப்பட்ட ஸ்னேஹ் ராணா வழி நடத்தி வருகிறார். இன்று பெங்களூர் அணி உடன் மூன்றாவது லீக் போட்டியை ஆடிவரும் நிலையில், மாற்ற ஆட்டக்காரரை அந்த அணி தேர்வு செய்துள்ளது. 

சமீப காலமாக மிகச் சிறப்பான ஆட்டத்தை விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வரும் தென்னாப்பிரிக்காவை சார்ந்த இளம் வீராங்கனை லாரா வோல்வட் அவருக்கு மாற்று வீரராக தேர்வு செய்திருப்பதாக செய்திகள் வந்துள்ளது. அவருடைய வரவு குஜராத் அணிக்கு நிச்சயம் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது அவர் பாகிஸ்தானில் காட்சி கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்த நிலையில் அவரை குஜராத் அணி தேர்வு செய்ததால், உடனடியாக இந்தியா வருகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Laura Wolvaardt to replace Beth Mooney in the Gujarat Giants squad


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->