ஒரே இடத்தில குவிந்த 15 லட்சம் பேர்! விமானப்படை தளபதி ஏ.பி.சிங் நெகிழ்ச்சி! - Seithipunal
Seithipunal


இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் 21 வருடங்களுக்கு பிறகு வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றன.

இதில், சுகோய், ரபேல் உள்ளிட்ட 72 விமானங்கள் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளன. தேஜஸ், டகோட்டா, ஹார்வர்ட், ரஃபேல் உள்ளிட்ட விமானங்கள் சீறிப் பாய்ந்தன.

மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சி கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 40 பேர் மயக்கம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. 

விமான சாகச நிகழ்ச்சி முடிவில், விமானப்படை தளபதி ஏ.பி.சிங் தெரிவிக்கையில், இந்த வண்ணாம்புயமான சாகசத்தை சுமார் 15 லட்சம் மக்கள் கண்டு களித்து உள்ளனர். 

இது லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக தலைநகர் டெல்லி, சண்டிகர் உள்ளிட்ட நகரங்களில் இதுபோன்று விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கிறது. 

ஆனால் இவ்வளவு எண்ணிக்கையில் மக்கள் திரண்டு வந்து பார்த்தது சென்னையில் தான்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Marina Army Air Show 15l People watch


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->