சாகச நிகழ்ச்சி! தவித்துப்போன சென்னை மக்கள்! பலமணிநேர சிக்கல், சிறிது ஆறுதல் செய்தி! - Seithipunal
Seithipunal


இந்திய விமானப்படையின் 92 வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, இன்று சென்னை மெரினா கடற்கரையில் இந்திய ராணுவத்தின் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. 

மொத்தம் 72 விமானங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சாகசம் நடத்தின. காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சாகச நிகழ்ச்சியை காண அதிகாலை முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் சாரை சாரையாக திரண்டு வந்து கலந்து கொண்டனர். 

ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி நடந்த போராட்டம் மற்றும் காணும் பொங்கல் அன்று மெரினாவில் கூடிய கூட்டத்தை விட லட்சக் கணக்கில் மக்கள் திரண்டு இந்த விமான சாகச நிகழ்ச்சியை பார்வையிட்டனர்.

இந்த விமான சாகச நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்ப முடியாமல் மக்கள் சுமார் மூன்று மணி நேரம் அந்தப் பகுதியிலேயே சிக்கித் தவித்தனர்.

40க்கும் மேற்பட்ட மக்கள் மயக்கம் அடைந்து சாலைகளிலேயே சுருண்டு விழுந்தனர். அவர்களை உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் சிகிச்சை முடிந்து பலரும் வீடு திரும்பியதாக தெரிய வருகிறது.

சென்னை மெட்ரோ ரயில், பறக்கும் ரயில் நிலையங்களில் மக்கள் அதிக அளவில் கூடியதால் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. மெட்ரோ ரயில்களில் டிக்கெட் இல்லாமல் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சாலையில் வாகன போக்குவரத்துக்கு பதிலாக மக்கள் நடந்தே சென்றனர். குறிப்பாக அண்ணா சதுக்கம் பகுதியில் எங்கு திரும்பி பார்த்தாலும் மனித தலைகளாகவே காணப்பட்டன.

தற்போது போக்குவரத்து நெரிசல் ஓரளவுக்கு சீரடைந்து வருவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு சில மணி நேரங்களில் போக்குவரத்து சீரடைந்து, பொதுமக்கள் தங்களின் இல்லங்களுக்கு சென்றடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Marina Army Air Show Struggle


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->