கற்பழிப்பு வீடியோவை பொதுமக்களும் பார்க்கலாம்!...பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கிஸ்செல் பெலிகோட் என்பவரின் கணவர் டாமினிக் பெலிகோட். இந்த நிலையில், கிஸ்செல்லை அவரது கணவர் டாமினிக் ஏறக்குறைய 10 ஆண்டுகளாக அவருக்கே தெரியாமல், வீட்டில் மயக்க மருந்து அளித்து, வெளியாட்களை அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்ய வைத்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  மேலும் இதனை புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் அவரது கணவர் படம் பிடித்து வைத்து கொண்டுள்ளார்.

இதற்கிடையே கடந்த 2020-ம் ஆண்டில் சூப்பர்மார்க்கெட் ஒன்றில் 3 பெண்களின் உள்ளாடைகளுக்குள் அவர்களுக்கு தெரியாத வகையில், ரகசிய கேமிராவை வைத்து, டாமினிக் படம் பிடித்து கொண்டிருந்தபோது, போலீசார் கைது செய்யப்பட்டார்.  தொடர்ந்து அவரின் கணினியை கைப்பற்றி போலீசார் அதில் ஆய்வு மேற்கொண்டதில்  திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

அதில், மனைவியை அவர் சித்ரவதை செய்த விவரம் காட்சிப்படுத்தப்பட்டு இருந்ததும், இந்த விவரம் கிஸ்செல்லுக்கு தெரிய வந்ததும், கடந்த ஆகஸ்டில், கணவரிடம் இருந்து கிஸ்செல் விவாகரத்து பெற்றார்.

இதையடுத்து கணவர் டாமினிக்குக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  இந்த வழக்கு விசாரணையில் கணவர் குற்றத்தை ஒப்பு கொண்டுள்ள நிலையில், இந்த வழக்கில் கணவர் உள்பட 51 பேர் கிஸ்செல்லை உடல்ரீதியாக துன்புறுத்தி உள்ளதும் தெரிய வந்ததை அடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கின் வீடியோ சான்றுகள் திரையிடப்படும்போது, அதனை பொதுமக்களும், ஊடகங்களும் பார்க்க வசதிகள் செய்யப்பட வேண்டும் என கிஸ்செல் பெலிகோட் விருப்பம் தெரிவித்த நிலையில், அதற்கு நீதிபதிகள் தொடக்கத்தில் மறுப்பு தெரிவித்த நிலையில், வீடியோ சான்றுகள் திரையிடப்படும்போது, பொதுமக்களும் இருக்கலாம் என்ற உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்து உள்ளது.

மேலும் இந்த கொடூர சம்பவத்தில், குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The public can also watch the rape video the court ordered action in the case filed by a woman


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->