நடாஷா - ஹர்திக் பாண்டியா பிரிந்து வாழ முடிவு! மகனின் நிலை என்ன?!
Natasa Stankovic Hardik pandya divorce
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா கடந்த நான்கு வருடத்திற்கு முன் செர்பியா நாட்டைச் சேர்ந்த நட்டாசாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையில் கருத்த வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற உள்ளதாக தகவல் கசிந்தது. அதனை உறுதி படுத்தும் விதமாக நட்டாசா தனது ஆண் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.
மேலும், உலகக் கோப்பையை வென்ற பின், வெற்றி கொண்டாட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா உடன் அவரின் மனைவி, குழந்தைகள் இல்லை. அப்போது நட்டாசா குழந்தையுடன் செர்பியா சென்று இருந்தார். இதுவும் இந்த விவாகரத்து விஷயத்தை உறுதிப்படுத்தியது.
இந்நிலையில், இருவரும் பிரிந்து வாழ பரஸ்பர முடிவு எடுத்து உள்ளதாக ஹர்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் அதிகாரபூர்வமாகவே அறிவித்துவிட்டார்.
அந்த அறிவிப்பில், "4 வருடங்கள் ஒன்றாக இருந்த நடாசாவும் நானும் பரஸ்பரம் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். நாங்கள் எங்களால் இயன்றதை ஒன்றாக முயற்சித்து எங்களால் முடிந்த அனைத்தையும் பகிர்ந்து கொண்டோம்.
இத்தனை காலம் நாங்கள் ஒன்றாக அனுபவித்த மகிழ்ச்சி, பரஸ்பர மரியாதை, தோழமை என அனைத்தையும் கருத்தில் கொண்டு, நாங்கள் பிரிவது எங்கள் இருவருக்கும் சிறந்த நலன் என்று நம்புகிறோம். இந்த முடிவு எங்களுக்கு ஒரு கடினமான முடிவாகும்.
எங்கள் மகன் எங்கள் இருவரின் வாழ்க்கையின் மையத்திலும் தொடர்ந்து இருப்பார், மேலும் மகனின் மகிழ்ச்சிக்காக எங்களால் முடிந்த அனைத்தையும் வழங்குவதை உறுதிசெய்ய ஒத்துழைப்போம்.
இந்த கடினமான மற்றும் முக்கியமான நேரத்தில் எங்களுடைய இந்த தனிப்பட்ட முடிவுக்கு உங்கள் ஆதரவையும், புரிதலையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
English Summary
Natasa Stankovic Hardik pandya divorce