முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை வீழ்த்திய நியூசிலாந்து அணி; ஆட்ட நாயகனாக மேட் ஹென்றி..!
New Zealand team defeated Sri Lanka in the first ODI
இலங்கை கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 03 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை நியூசிலாந்து வீழ்த்தியுள்ளது. போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 178 ரன்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. இலங்கை அணி சார்பாக அவிஷ்கா பெர்னண்டோ 56 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி 04 விக்கெட்டும், ஜேக்கப் டுபி, நாதன் ஸ்மித் தலா 02 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரச்சின் ரவீந்திரா - வில் யங் களமிறங்கினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் எடுத்த நிலையில், ரச்சின் 45 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து இறங்கிய சாப்மேன் 29 ரன்னும், வில் யங் அதிரடியாக ஆடி வில் யங் 90 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், நியூசிலாந்து அணி 26.2 ஓவரில் 01 விக்கெட் இழப்பிற்கு, 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக மேட் ஹென்றி தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் 03 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
English Summary
New Zealand team defeated Sri Lanka in the first ODI