முதல் டி20 போட்டி.. தனி ஆளாக போராடிய தமிழன் வாஷிங்டன் சுந்தர்.. நியூசிலாந்து வெற்றி.! - Seithipunal
Seithipunal


இந்திய அணிக்கு முதல் டி20 போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, இந்திய அணிக்கு எதிராக 3 ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் முதலில் நடைபெற்ற ஒரு நாள் தொடரில் மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி. அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு ராஞ்சி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹார்திக் பாண்டியா பௌலிங் தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய டேரி மிட்செல் 59 ரன்களும், கான்வே 52 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட் வீழ்த்தினார். 

அதனைத் தொடர்ந்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணியின் வெற்றிக்காக கடைசிவரை தனி ஆளாக போராடிய வாஷிங்டன் சுந்தர் 28 பந்துகளில் (3 சிக்ஸர் & 5 பவுண்டரி) 50 ரன்கள்  எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Newzealand won by 21 runs against India in 1st T20


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->