ஹாக்கி உலகக் கோப்பை வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் ரூ.1 கோடி பரிசு.. ஒடிசா முதல்வர் அறிவிப்பு..!!
Odisha CM said if Indian hockey team wins each player will get Rs1crore prize
ஒடிசா மாநிலத்தில் 2023ம் ஆண்டிற்கான 15வது ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி தொடர் நடைபெற உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு 14 வது ஹாக்கி உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. இந்த நிலையில் ஒரிசா மாநிலத்தில் உள்ள பெர்சா முண்டா சர்வதேச ஹாக்கி விளையாட்டு அரங்கில் வரும் ஜனவரி 13ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை சர்வதேச ஆண்கள் உலக கோப்பை ஹாக்கி போட்டி தொடர் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் பெர்சா முண்டா சர்வதேச ஹாக்கி விளையாட்டு அரங்கின் வளாகத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய உலகக் கோப்பை கிராமத்தை நேற்று திறந்து வைத்தார். அப்பொழுது பேசிய அவர் ஹாக்கி உலகக் கோப்பையை இந்திய அணி வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
English Summary
Odisha CM said if Indian hockey team wins each player will get Rs1crore prize