நான் அப்படி செஞ்சிருக்க கூடாது - மனம் திறந்த பிரக்ஞானந்தா.!
open minded Pragnananda
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்து வருகிறது. இதனை ஜூலை 28-ம் தேதி பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைத்தாா்.
இதில், இதுவரை விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் ஓபன் மற்றும் மகளிர் என இரு பிரிவிலும் இந்திய அணியினர் வெற்றி பெற்றுள்ளனர். மேலும், ஓபன் பிரிவில் மூன்று இந்திய அணிகளும் நேற்று வெற்றி பெற்றன.
இதனை தொடர்ந்து, பிரக்ஞானந்தா ஸ்விட்சர்லாந்து வீரர் யானிக்கை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் பிரக்ஞானந்தா பலவீனமான நிலையில் இருந்ததால் அவர் தோற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தோல்வி பெறும் நிலையிலிருந்த இருந்து பிரக்ஞானந்தா தொடர்ந்து போராடினார். போராட்டத்தின் பலன் அவருக்கு கிடைத்தது, கடைசி நேரத்தில் அவர் வெற்றி பெற்றார். நேரம் முடிந்துபோனதால் எதிர்பாராதவிதமாக யானிக் தோல்வி அடைந்தார்.
இந்த ஆட்டம் குறித்து பிரக்ஞானந்தா தெரிவிக்கையில், "நான் மோசமாக விளையாடினேன். இந்த வெற்றி எனக்கு எந்த மகிழ்ச்சியையும் தரவில்லை.
ஆட்டம் முழுக்கத் தடுமாறினேன், இந்த ஆட்டத்தை டிரா செய்யவே நினைத்தேன். என் எதிர் போட்டியாளர் யானிக்காக வருத்தம் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.