நான் ரெடி! இந்திய அணி ரெடியா? உடல் தகுதி பெற்றார் ஷாஹீன் அஃப்ரிடி! - Seithipunal
Seithipunal


கடந்த உலகக் கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வி அடைவதற்கு அஃப்ரிடி முக்கிய காரணம்!

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் 14ஆம் தேதி முதல் நவம்பர் 13ம் தேதி வரை டி20 உலக கோப்பை போட்டி நடைபெற உள்ளது. மொத்தம் 45 போட்டிகள் இந்த உலக கோப்பையில் நடைபெற உள்ளது. நவம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் அரையணி ஆட்டங்கள் சிட்னி மற்றும் அடிலட்டில் நடைபெற உள்ளன இறுதிப் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது.

உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்றுக்கு ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய எட்டு நாடுகள் நேரடியாக தகுதி பெற்றுவிட்டது. மீதமுள்ள நான்கு அணிகளுக்கு முதல் சுற்று போட்டி அதன் வழியாக சூப்பர் 12 சுற்று தேர்வாகியுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பை டி20 மற்றும் இங்கிலாந்து தொடரிலும் பாகிஸ்தான் வேத பந்துவீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி காயம் காரணமாக பங்கேற்கவில்லை. நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு எதிரான முத்தரப்பு t20 போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை. எனினும் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை காண பாகிஸ்தான் அணியில் அவர் இடம் பெற்றுள்ளார்.

காயத்திலிருந்து அப்ரெடி குணமாகி முழு உடல் தகுதி அடைந்து விட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது டி20 உலக கோப்பை தொடர் தொடங்கும் முன்பு ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணி விளையாட உள்ள இரு பயிற்சி ஆட்டங்களிலும் அஃப்ரிடி பங்கேற்பாடு என தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வி அடைவதற்கு அப்ரிடி மிக முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan Cricket Board said that Afridi has recovered from the injury and is fully fit


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->