சென்னை அணியிலிருந்து பதிரனா விலகல்..சென்னை ரசிகர்கள் அதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


17வது சீசன் ஐபிஎல் போட்டி கடந்த மார்ச் மாதம் தொடங்கி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. டிபன்டிங் சாம்பியான சென்னை அணி விளையாடிய நான்கு போட்டிகளில் இரண்டு  வெற்றியும் இரண்டு தோல்வியும் சந்தித்துள்ளது.

ருத்ராஜ் தலைமையிலான சென்னை அணி கடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதியது. அப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

காயம்காரணமாக அப்போட்டியில் சென்னையின் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் பதிரனா விளையாடவில்லை.அப்போட்டியில், சென்னை அணியின் தோல்விக்கு காரணம் இலங்கை வீரரும் சென்னையின் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளருமான பதிரனா விளையாடதே என்று பலர் கூறி வந்த நிலையில், கொல்கத்தா இடையிலான அடுத்த போட்டியிலும் பதிரனா விளையாட மாட்டார் என்று பவுலிங் கோச் எரிக் சைமன்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி சென்னை அணி ரசிகர் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pathirana leaved as Chennai team Chennai fans shocked


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->