பிராக் மாஸ்டர்ஸ் செஸ்: முதலிடத்தில் அரவிந்த் சிதம்பரம்; 03-வது சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி..!
Praggnanandha Masters Chess Arvind Chidambaram is at the top Praggnanandha wins in the 3rd round
பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசில் நடந்து வருகிறது. இந்த போட்டி 09 சுற்றுகள் கொண்டது. இதில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம், நெதர்லாந்தின் அனிஷ் கிரி உள்ளிட்ட 10 பேர் பங்கேற்கின்றனர்.
இதன் 03-வது சுற்றில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா, செக்குடியரசின் தாய் டாய் வான் நுயென் ஆகியோர் மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 29-வது நகர்த்தலில் போது வெற்றி பெற்றார். முதல் இரு ஆட்டங்களில் டிரா கண்டு இருந்த பிரக்ஞானந்தா இந்த தொடரில் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம், சீனாவின் யி வெய் மோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் அசத்திய அரவிந்த், 44-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இது, இவரது 2வது வெற்றியாகும்.
அத்துடன், ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், அமெரிக்காவின் சாமுவேல் ஷாங்க்லேண்ட்டை வீழ்த்தினார். நெதர்லாந்தின் அனிஷ் கிரி, செக்குடியரசின் டேவிட் நவாரா மோதிய 03-வது சுற்றுப் போட்டி 'டிரா' ஆனது.

மூன்று சுற்றுகளின் முடிவில் அரவிந்த் சிதம்பரம் 2.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். பிரக்ஞானந்தா, வின்சென்ட் கீமர் தலா 2.0 புள்ளிகளுடன் 02-0வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், செஸ் தரவரிசை பட்டியல் 2025-இல் பிரக்ஞானந்தா (2,758) 08-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். அவர் கடந்த ஆண்டு ஜூலை மாதத்துக்கு பிறகு டாப்-10 இடங்களுக்குள் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Praggnanandha Masters Chess Arvind Chidambaram is at the top Praggnanandha wins in the 3rd round