புரோ கபடி லீக், ஹரியானா அசத்தல் வெற்றி.! - Seithipunal
Seithipunal


புரோ கபடி லீக் ஆட்டத்தில் பெங்கால் அணியை வீழ்த்தி ஹரியானா அணி வெற்றி பெற்றுள்ளது.

12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் ஆட்டங்கள் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்காள் அணியும், ஹரியானா அணியும் மோதின, ஆட்டத்தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய பெங்கால் அணி 11-9 என முன்னிலையில் இருந்தது. திடீரென எழுச்சி கண்ட ஹரியானா வீரர்கள் பெங்கால் அணியின் அனைத்து வீரர்களையும் வீழ்த்தி, 17-15 என முன்னிலை பெற்றனர். ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 19-19 என சம நிலையில் இருந்தனர். 

பின்னர் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஹரியான அணியினர் ஆதிக்கம் செலுத்தி பெங்கால் வீரர்களை வீழ்த்தினர். ஆட்ட நேர முடிவில் 46-29 என்ற புள்ளி கணக்கில் ஹரியானா அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஹரியானா அணி 16 போட்டிகளில் 7 வெற்றி, 6 தோல்வி, 3 டை என 48 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. பெங்கால் அணி 16 போட்டிகளில் 7 வெற்றி 8 தோல்வி 1 டை என 41 புள்ளிகளுடன் 10 வது இடத்தில் நீடிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pro Kabadi Hariyana beats Bengal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->