இந்தியா vs தென் ஆப்ரிக்கா ஒருநாள் தொடரிலிருந்து விலகிய முக்கிய வீரர்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


இந்திய அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா விடுவிக்கப்படுவதாக தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்கா வென்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா விடுவிக்கப்படுவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இரு அணிகளுக்கிடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை போலண்ட் பார்க்கில் இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rabada rested india one day serious


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->