#BigBreaking || இந்திய கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை : அறிமுகம் ஆன முதல் ஆட்டத்திலேயே 56பவுண்டரிகள்., 341 குவித்த இளம் பீகார் சிங்கம்.! - Seithipunal
Seithipunal


38 அணிகள் பங்கேற்கும் 87-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியுள்ளன. லீக் சுற்று மற்றும் நாக் அவுட் சுற்று என இரண்டு சுற்றுகளாக இந்த தொடர் நடைபெறுகிறது. 

லீக் சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்கி மார்ச் 6-ஆம் தேதி வரை சென்னை, அகமதாபாத், திருவனந்தபுரம், டெல்லி, ராஜ்கோட், கட்டாக், கொல்கத்தா உள்ளிட்ட 9 நகரங்களில் நடைபெற உள்ளன. நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் ஜூன் மாதம் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இன்று முதல்தர கிரிக்கெட்டின் அறிமுக போட்டியிலேயே 3 சதங்களை (300) விளாசி பிகார் மாநில வீரர் சகிப்புல் கனி சாதனை படைத்துள்ளார்.

இன்று மிசோரம் மாநில அணிக்கு எதிரான போட்டியில் சகிப்புல் கனி 405 பந்துகளில், 341 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 56 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உதவியுடன் தனது முதல் போட்டியிலேயே 341 ரன்களை விளாசி சாதனை படைத்துள்ளார் சகிப்புல் கனி.

முன்னதாக, டெல்லி வீரர் யாஷ்துல், ரஞ்சி கோப்பை கிர்க்கெட் போட்டியில் அறிமுகமான முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். 150 பந்துகளில் 113 ரன்கள் எடுத்திருந்த போது முகமது பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். 

ஏற்கனவே சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரித்விஷா ஆகியோரும் ரஞ்சி கோப்பை அறிமுக ஆட்டத்தில் சதமடித்து சாதனை புரிந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ranji Trophy Sakibul Gani


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->